சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ சந்நிதானம் நேபாளத்தில் முகாம்



காத்மாண்டு: நேபாள நாட்டு தலைநகர் காத்மண்டு வந்தடைந்த, சிருங்கேரி மடத்தின் ஸ்ரீவிதுசேகர பாரதீ சந்நிதானத்துக்கு, அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு துாளி பாத பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பசுபதிநாதர் கோவிலுக்கு விஜயம் செய்த சந்நிதானம், விசேஷ பூஜையில் பங்கேற்றார்.  சிருங்கேரி மடத்தின் சார்பில் அபிஷேக சாமான்கள் அடங்கிய வெள்ளி பாத்திரங்களுக்கு, ருத்ர பாராயணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீ சாரதா பீடம் சார்பில், சிவ அஷ்டோத்திரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள், பெரிய பதக்கம் இணைக்கப்பட்ட 3 அடி தங்க மாலை, பசுபதிநாதருக்கு பட்டு வஸ்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது. தீபாராதனைக்குப் பின், கோவில் சார்பில் பசுபதிநாதர் உருவம் பொறித்த 1 அடி உயர ஸ்படிக லிங்கம், சந்திதானத்துக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. காத்மாண்டுவில் அமைந் துள்ள ராமர் கோவில், முத்த நீலகண்ட சுவாமி கோவில், கால பைரவர் கோவில் ஆகியவற்றுக்கும், சந்நிதானம் விஜயம் செய்தார். காத்மாண்டு நகரில், குழந்தைகள் மருத்துவ மனையை திறந்து வைத்தார். நேபாளத்தில் தங்கி இருக்கும் நாட்களில், பல்வேறு கோவில்களுக்கும் சந்நிதானம் விஜயம் செய்கிறார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்