சோழவந்தான் : ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தீச்சட்டி பால்குடம் நடந்தது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி அமாவாசைக்கு அடுத்த திங்கள் அன்று கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா நடக்கும். இந்த ஆண்டு கடந்த மே 18 கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் தீச்சட்டி ஆயிரம் கண் பானை அலகு குத்தி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோயிலில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.