பழநி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி; மரகதலிங்கத்திற்கு 16 வகை அபிஷேகம்



பழநி: பழநி முருகன் கோயில் போகர் சன்னதியில் போகர் ஜெயந்தி விழா நடைபெற்றது.


பழநி முருகன் கோயிலில் மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனை போகர் சித்தர் உருவாக்கியுள்ளார். இவருடைய ஜீவசமாதி, பழநி கோயிலில் உள்ளது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு பூஜை நடைபெற்று வருகிறது. அங்கு இன்று போகர் சித்தரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உச்சி கால வேளையில் புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கம் ஆகியவற்றிற்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் புலிப்பாணி ஆசிரமம், சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், பழநி எம்.எல்.ஏ., ரவிமனோகரன், வெளி மாநில, மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்