வடுகபட்டியில் அம்மன் கோயில் உற்ஸவ விழா



வாடிப்பட்டி: வடுகபட்டியில் முத்தாலம்மன், பகவதி அம்மன் கோயில் உற்ஸவ விழா மே 26ல் களரிக்கு சாமி சாட்டுதல், காப்பு கட்டுதலுடன் துவங்கி 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவு பூஜாரி அழைப்பு, நள்ளிரவு கிரகம் எடுக்கச் சொல்லுதல், அதிகாலை 1:00 மணிக்கு களரிக்கு கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல், பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டாம் நாள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அக்னிசட்டி எடுத்து வழிபட்டனர். காலை வணக்கம் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். 3ம் நாள் அம்மன் பூஞ்சோலை செல்லுதல் மற்றும் மஞ்சள் நீராடுதல் விழா நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்