கோவை ; ஆனி மாதம் முதல் செவ்வாய் கிழமை கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் வள்ளி தேவசேனா சமேதரராக முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகபெருமானை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது