சிங்கவரம் ரங்கநாதர் கோவில் திருத்தேர் உற்சவம்; ஆயிரக்கணக்காண பக்தர்கள் வடம் பிடித்தனர்



செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.


செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவில் 10 நாள் பிரம்மோற்சவம் கடந்த 10ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை சூர்ய பிரபை வாகனத்திலும், மாலை ஹம்சவாகனதில் சாமி வீதி உலா நடந்தது. 11ம் தேதி சிம்ம வாகனத்திலும், 12ம் தேதி அனுமந்த வாகனத்திலம், 13ம் தேதி சேஷ வாகனத்திலும், 14 ம் தேதி கருட சேவையும், 15ம் தேதி யானை வாகனத்திலும் சாமி வீதி உலா நடந்தது. 7ம் நாள் விழாவாக நேற்று திருக்கோவில் சார்பில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்து, 8 மணிக்கு தேரில் ஏற்றினர். 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. எம்.எல்.ஏ., கணேஷ்குமார், மாஜி அமைச்சர் மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல், ஆய்வாளர் சங்கீதா, அலுவலர்கள் மணி, இளங்கீர்த்தி, ஊராட்சி தலைவர் பரசக்தி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். மாடவீதிகள் வழியாக தேர் பவனி வந்த போது பக்தர்கள் நாணயம், காய்கரிகள், தானியங்களை வாரி இறைத்து நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 8 ம் நாள் விழாவாக இன்று குதிரை வாகனத்திலும், நாளை சந்திரபிரபை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்