கண்டதேவியில் குங்கும காளியம்மன் கோவில் தேரோட்டம்



 தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் குங்கும காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஜூன் 6ம் தேதி கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரத்தில் வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாளான நேற்று மாலை குங்கும காளியம்மன் அலங்காரத்தில் தேரில் வீற்றிருக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க அம்மன் நான்கு வீதிகளில் வலம் வந்தார். கண்டதேவி, தேவகோட்டை உட்பட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்