சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கொடியேற்றம்



அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ கொடியேற்றம் நடந்தது.

கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா நேற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, யாகம் வளர்க்கப்பட்டு, சாமிக்கு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், கொடிக்கு பூஜைகள் செய்து, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

விழா நாட்களில் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 13ம் நாள் விழாவாக மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்