ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கடந்த 3 மாதங்களில் 90 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் புருஷோத்தமன் மேற்பார்வையில் உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. செயல் அலுவலர் அறிவழகன், எழுத்தர் விமல்ராஜ் மற்றும் சிலர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 90 ஆயிரத்து 117 ரூபாய் பணம் இருந்தது. காணிக்கை பணம் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.