மீனாட்சி கோயில் வீர வசந்தராயர் மண்டபத்தில் கடைசி துாண் பொருத்தப்பட்டது



மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் அருகே உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் நிறைவாக 79வது துாண் பொருத்தும் பணி நிறைவடைந்தது. செப்., 17 ல் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இக்கோயில் கிழக்கு கோபுரம் அருகே உள்ள வீரவசந்த ராயர் மண்டபத்தில் இருந்த கடை ஒன்றில் இருந்து 2018 பிப்., 2 ல் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு மண்டபம் சிதிலமடைந்தது.

இதனால் கும்பாபிஷேகம் நடத்துவது தள்ளிப்போனது. மண்டபத்தை சீரமைக்கும் பணி சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. சேதமடைந்த மண்டபத்தை சீரமைக்க ரூ.35.30 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணத்தில் உள்ள பாறைப் பகுதியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்க, கோயில் பெயரில் கனிமவளத்துறையில் அரசாணை பெறப்பட்டு கற்கள் எடுக்கப்பட்டன.

இக்கற்கள் கோயிலுக்கு சொந்தமான கூடல் செங்குளம் பண்ணைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பாறைகளை துாண்களாக வடிவமைக்கும் பணி திருப்பூர் திருமுருகன் பூண்டியைச் சேர்ந்த ஸ்தபதி வேல்முருகன் தலைமையில் நடந்தது. வீரவசந்தராயர் மண்டபத்தில் மொத்தம் 79 தூண்கள் உள்ளன. இதில் 73 துாண்கள் ஏற்கனவே பொருத்தப்பட்ட நிலையில் 2026 மே 15க்குள் மீதமுள்ள ஆறு துாண்களை முழுமையாக முடிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

சித்திரைத் திருவிழா காரணமாக துாண்கள் சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் செப்., 17 நடப்பதை முன்னிட்டு திருப்பணிகளும் வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளும் ஒருசேர நடக்கின்றன. தற்போது வரை குவாரியிலிருந்து 65 ஆயிரம் கன அடி கற்கள் எடுக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவிற்கு பின் ஐந்து துாண்கள் பொருத்தப்பட்டன. நிறைவாக 79வது துாண் நேற்று இணை ஆணையர் சுரேஷ் தலைமையில் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்