தொட்டியம்: தொட்டியம் ஒன்றியம் வரதராஜபுரம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள புஷ்பவல்லி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 36 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மிக விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தது. லட்சுமி ஹோமம் கணபதி ஹோமம் பூர்ணாஹூதி மற்றும் நான்காம் கால பூஜை நேற்று காலை நடந்தது அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பிறகு புஷ்பவல்லி சமேத புஸ்பவனேஸ்வரர் கோயில் விமானங்களுக்கு காலை 7.20 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு புஷ்பவல்லி தாயார் சமேத புஷ்பவனேஸ்வரர் சுப்பிரமணியர் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் தொட்டியம் மகேந்திரமங்கலம் சீனிவாசன், வரதராஜபுரம், அரசலூர், பாலசமுத்திரம், ஆட்டியபட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் மணிகுட்டி, கல்யாணசுந்தரம், கணேசன், சேகர், ஸ்ரீதர், பிரசன்னா கிருஷ்ணமூர்த்தி, சாய், ராமச்சந்திரன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.