குண்டத்து காளியாதேவி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை



மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சி, ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாதம் அமாவாசை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு பவானி ஆற்றின் கரையோரம் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரன், சிவலிங்கம், கங்காதேவி, முருகன், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு, அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது.

பின்பு குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின் பூஜை செய்தனர். கோவில் எதிரே உள்ள விநாயகர், காளிதேவி, நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பூஜைகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிகோவிலில், ஆனி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலையில் நடை திறந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கார பூஜை முடிந்தவுடன், சுவாமியை வழிபட பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன் சாமியை வழிபட்டனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்