மூணாறில் முருகன் கோயில் ரோடு சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது



மூணாறு; மூணாறில், இக்கா நகர் புறவழி சாலையில், சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் ரோடு சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. அந்த ரோடு சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மாவட்ட ஊராட்சி சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் ரோடு சீரமைக்கப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. அதனை எம்.எல்.ஏ., ராஜா திறந்து வைத்தார். அதற்கான நிகழ்ச்சிக்கு இந்து தேவஸ்தானம் குழு தலைவர் பாபுலால் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மணி, மூணாறு ஊராட்சி தலைவர் விஜயகுமார், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் நெல்சன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ராஜாராம், ரீனா, வார்டு உறுப்பினர் பிரைட்டி, காங்., மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, ஐ. என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், இந்து தேவஸ்தானம் குழு பொது செயலாளர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்