பஞ்சபூத சக்திகளும் உள்ளடங்கிய பசுமாடு கோ பூஜை நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்!



பல்லடம்; பஞ்சபூத சக்திகளும் உள்ளடங்கிய ஒரே விலங்கு பசுமாடு மட்டுமே என, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் நடந்த கோ பூஜை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பல்லடம் பொங்காளியம்மன் கோவில் குலதெய்வ மக்கள், அப்பர் உழவாரப்பணிக் குழு, கோ சேவா சமிதி ஆகியவற்றின் சார்பில், பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் நேற்று கோ பூஜை‌ நிகழ்ச்சி நடந்தது. பாரத பண்பாட்டு கேந்திரத்தின் மாநில அமைப்பாளர் பரமேஸ்வரன்‌, மாநில பொறுப்பாளர் சித்ராதேவி ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோ சேவா சமிதி மாவட்ட பொறுப்பாளர் சம்பத்‌நாட்டு மாடுகளை வைத்து மட்டுமே கோ பூஜை செய்ய வேண்டும். அப்போதுதான் பூஜையின் முழு பலன் கிடைக்கும். இரண்டு கன்று குட்டிகளை ஈன்றிருந்தால் மட்டுமே அது கோமாதா என்ற அந்தஸ்தை பெறுகிறது. பிரபஞ்சத்தை காக்கும் பஞ்சபூத சக்திகளும் அடங்கிய ஒரே விலங்கு பசுமாடுகள் மட்டுமே. பஞ்சபூத சக்திகளும் நன்றாக இருந்தால்தான், மனிதர்கள் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க முடியும். மனித குலத்துக்கு எது மனித குலத்துக்கு எது நல்லதோ அதைத்தான் நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்த கோ பூஜை. நாட்டு மாடுகளின் பாலை குடிப்பதால் சாத்வீக குணமும்,

தர்ம சிந்தனையும் வரும். முடிந்தால் வீட்டில் பசுமாட்டை வளருங்கள். இல்லையெனில், அதை வளர்ப்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு நடந்த கோ பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று, 108 போற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பொங்காளியம்மன் உற்சவமூர்த்தி கோவிலை வலம் வர, கோமாதாவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்