பண்ருட்டி பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா



நடுவீரப்பட்டு: பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பண்ருட்டி அடுத்த எழுமேடு மன்னார்சாமி, பச்சைவாழியம்மன் கோவிலில் சமீபத்தில், தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்து, சுவாமி திருமண கோலத்தில் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து, தீமிதி திருவிழா நடந்தது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருக்கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிகள் உற்சவம் நடந்தது. மேலும், பச்சைவாழியம்மனுக்கு பால் அபிஷேகமும், மஞ்சள்நீர் உற்சவமும் நடந் தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்