தஞ்சாவூர் பெரியகோவிலில் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் வாராஹி அருள்பாலிப்பு



தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில், ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு, வாராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது


தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய  ஸ்ரீபெருவுடையார் ஆலயத்தில்  தனி சன்னதியில் உள்ள ஸ்ரீமஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் 13ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று வாராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்