கோவை ; திருவரங்கத்தில் ராமானுஜர் செய்த சரணாகதி என்ற தலைப்பில் உபன்யாச நிகழ்ச்சி கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் மூன்று நாள் நிகழ்வாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வானது தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ உ வே வேங்கடேஷ் சுவாமிகள் உபந்யாசத்தை நிகழ்த்தினார். வெள்ளிகிழமையன்று பரமன் அடி பணிதல் என்ற தலைப்பிலும் சனிக்கிழமையன்று அரங்கன் அருள் சூடுதல் என்ற தலைப்பிலும் நிறைவு நாளாக ஞாயிற்றுக்கிழமையன்று பரமபதம் பார்த்தல் என்று தலைப்பிலும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.