நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி பூஜை



நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி பூஜை நடந்தது.  நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 2 ம் தேதி நடந்தது. தொடர்ந்து 48 நாட்களாக மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்தது. மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று நடந்தது. அதனையொட்டி, கணபதி ஹோமம், 108 சங்குகள் மற்றும் 18 கலசங்களில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தி ஐயப்பனுக்கு சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் செய்தனர்.18 படிகள் அமைத்து படி பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்