கீழக்கரை: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படும் விழா சங்கடகர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது.
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயில் உள்ளது. இங்கு சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள வல்லபை கணபதிக்கு சங்கடகர சதுர்த்தி பூஜை கொண்டாடப்பட்டது. விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.