திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 21 லட்சம்



தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 205 ரொக்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மாதத்தில் உண்டியலில் சேகரிக்கப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி, கோயில் அறங்காவலர் அருள்முகன் மற்றும் இணை ஆணையர் அருணாசலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட கோயில் பணியாளர்களும், கோயில் சேவைக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் பக்தர்கள் 1,022 கிராம் தங்கம், 22,292 கிராம் வெள்ளி மற்றும் 1,447 வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 205 ரொக்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்