அனுப்பர்பாளையம் அரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்



அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த அனுப்பர் பாளையத்தில் அமைந்துள்ள 74 ஆகனபட்டு கஞ்சக கன்னார் சமூகத்தாரின் ஶ்ரீ தேவி பூ தேவி சமேத ஶ்ரீ அரங்கநாத பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக திருவிழா கடந்த 11 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.


விழாவையொட்டி, இன்று  13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கு மேல் ஹோமம், திருவாராதனம், திவ்ய பிரபந்தம், திருவாராதனை, பூர்ணாஹீதி, உபசாரம், நாடி சந்தனம், யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைப்பெற்றது. தொடர்ந்து, 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் காரமடை ஸ்ரீ அரங்கநாத சுவாமிகள் திருக்கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர் ஸ்வாமிகள் தலைமையில் ஸ்ரீ அரங்கநாத பெருமாளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.


10;00 மணிக்கு மேல் தசதரிசனம், திருவாராதனம், வேத பிரபந்தம், சாற்றுமுறை ஆசீர்வாதம், தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ஆயிரக கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாத பெருமாளை தர்சித்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்