கோவை; புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிறைவாக மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
புரட்டாசி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் மொண்டிபாளையம் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.