கோவை: புரட்டாசி சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.