காளஹஸ்தி சிவன் கோயிலில் மழை வேண்டி வருண மந்திர ஜப பாராயணம்: சிறப்பு அபிஷேகம்



பகிர்க copied

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த “வருண மந்திர ஜப பாராயணம் நிறைவடைந்தது. 


 


உலக மக்கள் நலன் வேண்டியும், மழை பெய்ய வேண்டி அனைத்து மக்களின் நல் வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. விழாவில் இசையில் கோவிலின் சங்கீத கலைஞர்கள், இயற்கை மற்றும் மழை தொடர்புடைய அமிர்தவர்ஷினி, மத்யமாவதி, வருணப்பிரியா, சமுத்திரப்பிரியா, ஆனந்த பைரவி போன்ற ராகங்களை பக்தியுடன் பாடினர். 


இதே போல் அறநிலையத்துறை சார்பில், மாநிலத்தில் நிலவும் தற்போதைய மழைப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில் மற்றும் நிறைவான மழை பெய்ய வருண் மந்திர ஜப  நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை, காலை 06:54 மணி முதல்,  கோயில் வளாகத்தில் உள்ள ம்ருத்யுஞ்சய சுவாமி சன்னதி முன்பாக வேத பண்டிதர்களால் “வருண மந்திர ஜப பாராயணம்” செய்யப்பட்டது. முன்னதாக கோயிலில் ம்ருத்யுஞ்சய சுவாமி சன்னதி அருகில் சிறப்பு கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மகா மிருத்யுஞ்சய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான செயல் அதிகாரி  வெங்கடேசுலு, அறங்காவலர் குழு உறுப்பினர்  குர்ரப்பா செட்டி மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்