காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா சாந்தியடைய வழிபட வேண்டிய மிக முக்கியமான நாளான யதி மஹாளயம், காஞ்சி சங்கர மடத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.
நடப்பாண்டிற்கான யதி மஹாளயத்தையொட்டி, காஞ்சி சங்கர மடத்தில், மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் பூர்வ ஆச்சார்யர்களுக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தன. சந்நியாசம் பெற்றவர்களுக்கு வழக்கமான நாட்களில் திதி சடங்குகளை செய்ய இயலாது என்பதால், அவர்கள் முக்தியடைந்த நாளாக கருதப்படும் இந்த மஹாளய பட்ச துவாதசி திதியில், அவர்களுக்குரிய வழிபாடுகள் செய்யப்படும். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, குருமார்களின் ஆசி பெற்றனர்.