சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் வருண யாகம்; மழை வேண்டி சிறப்பு பூஜை



பகிர்க copied

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.


ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவில். பழமைவாய்ந்த இக்கோவிலில், உலகை காக்க வேண்டி, ஆல கால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதிதேவி மடியில் தலை வைத்து உறங்குவது போன்ற கோலத்தில், பக்தர்களுக்கு சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இந்தாண்டு குறித்த நேரத்தில் மழை பெய்யாததால், அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகள் குறித்த நேரத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டி, நேற்று இன்று சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், வருண யாகம், வருண ஜபம் நடந்தது. சிவாச்சாரியார்கள், கோவில் குளத்தில் இறங்கி சிறப்பு பூஜை செய்தனர். பின், யாகசாலை அமைத்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்