பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 102 வது பிறந்தநாள் விழா: நூல் வெளியீடு



பகிர்க copied

பேரூர்: பேரூர் திருமடத்தில், மகம் நாள் வழிபாடு மற்றும் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 102வது பிறந்தநாள் வழிபாட்டில், இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது.


பேரூர் ஆதின மடத்தில், மகம் நாள் வழிபாடு மற்றும் 24ம் பட்டம் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 102வது பிறந்தநாள் வழிபாடு இன்று நடந்தது. இதில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் வேள்வியும், சாந்தலிங்கப்பெருமான் மற்றும் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் திருமேனிகளுக்கு அபிஷேகம் மற்றும் பேரொளி வழிபாடு நடந்தது. இதில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிதம்பர அடிகளார் நூலகத்தின் சார்பில், வழி இலக்கண நிறைகடல் கந்தசாமி பிள்ளை வாழ்க்கை குறிப்பு என்ற நூலையும், நற்சிந்தனைகளே நல்முத்துக்கள் எனும் நூலையும், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் வெளியிட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்