புரட்டாசி சனி: கோவை கோவில்களில் மகாவிஷ்ணுவிற்கு பூஜை அபிஷேகம்



பகிர்க copied

கோவை: புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை காந்தி பார்க் சுந்தரம் வீதி ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோல், புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி ரத்னம் கல்லூரி அருகே அமைந்துள்ள சிவா விஷ்ணு கோவிலில் மகாவிஷ்ணுவிற்கு  பூஜை அபிஷேகம் நடந்தது இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் மகாவிஷ்ணு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்