விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நவராத்திரி விழா துவக்கம்



பகிர்க copied

புதுச்சேரி: புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் 6ம் ஆண்டு நவராத்திரி விழா மற்றும் அசோக் சிங்கால் நுாற்றாண்டு விழா நேற்று துவங்கியது.

விழாவையொட்டி, காந்தி வீதி வரதராஜபெருமாள் கோவில் அருகில் நேற்று கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. வரும் 21ம் தேதி வரை துர்கா, லட்சுமி, சரஸ்வதி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

இன்று (11ம் தேதி) தக் ஷிண காளி மூலமந்திர ஹோமம் நடக்கிறது. நாளை 12ம் தேதி தாராதேவி மூல மந்திர ஹோமம், 13ம் தேதி வித்யா மூல மந்திரம், 14ம் தேதி புவனேஸ்வரி மூல மந்திரம், 15ம் தேதி திரிபுர பைரவி மூல மந்திர ஹோமம் நடக்கிறது.

16ம் தேதி சின்னமஸ்தா மூல மந்திர ேஹாமம், 17ம் தேதி துாமாதேவி மூல மந்திர ஹோமம், 18ம் தேதி பாகாளமுகி மூல மந்திர ஹோமம், 19ம் தேதி ராஜமாதங்கி மூல மந்திர ஹோமம், 20ம் தேதி ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நடக்கிறது. 21ம் தேதி துர்கா சிலை ஊர்வலம் நடக்கிறது.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்