இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு



பகிர்க copied

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபடுவது மற்றும் விரதம் இருப்பது செவ்வாய் தோஷத்தின் தாக்கத்தை குறைப்பதுடன், பொருளாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்த வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. நேற்று காலை 10:30 மணிக்கு சுவாமிக்கு வாசனை திரவியங்களால் மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் தேவா செய்திருந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்