செஞ்சி: மேல்மலையனுார் ஆதிபகவன் ஜெயின் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி துவக்க விழா நடந்தது.
மேல்மலையனுாரில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான ஆதிபகவன் ஜெயின் கோவிலில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்ட உள்ளனர். இதற்கான பணிகள் சிறப்பு பூஜையுடன் துவங்கியது. மேல்சித்தாமூர் மடாதிபதி லட்சுமி சேன மகா சுவாமிகள் தலைமை தாங்கினார். திருமலை மடாதிபதி தவளகீர்த்தி மகா சுவாமிகள் பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து திருமலை சுவாமிகளின் அறஉபதேசமும், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் அப்பாண்டராஜன் வரவேற்றார். கொங்கு வேளிர் இலக்கிய மன்றத்திற்கு தலைவராக லட்சுமி தத்தையும், செயலாளர்களாக பரிமளா ஜீவகன், ஷைலஜா, பொருளாளராக சாந்தா தேவதாஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். ஸ்ரீபால் நன்றி கூறினார்.