கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் பிடித்து அவர்களின் தொடக்கக் கல்வியை ஆரம்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
விஜயதசமி என்பதன் பொருள் விஜய என்பது வெற்றியையும் தசமி என்பது பத்தாவது நாளையும் குறிப்பிடுவது ஆகும் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாள் நிறைவு முடிந்து பத்தாவது நாள் விஜயதசமி என்று அழைக்கப்படுகிறது இந்த நாள் துர்கா பூஜையின் நிறைவு நாள் ஆகும் துர்கா தேவி மகிஷாசுரனை வதம் கொண்ட நாளாகவும் ராமபிரான் ராவணனை போரில் வெற்றி கண்டு என்ற நாளாகவும் பாண்டவர்கள் வன வாசத்தின் முடிவில் ஆயுதங்களை மீட்ட நாளாகவும் கருதப்படுகிறது இந்நாளில் ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றிகரமாக நடைபெறும் என்ற கருத்து அனைவரிடமும் உள்ளது இந்த நாளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்று சொல்லப்படும் நிகழ்ச்சியை நடத்துவார்கள் குழந்தைகளை தங்கள் மடியில் வைத்துக்கொண்டு குருநாதர் அல்லது பெரியவர்கள் தட்டினில் நெல் வைத்து மஞ்சள் கொம்பால் குழந்தைகளின் கையை தாயும் தந்தையும் குருவும் சேர்ந்து அதில் தமிழ் முதல் எழுத்தான அ ஆ என்ற எழுத்தை எழுத பழகி தருவார்கள் இதனால் தங்கள் குழந்தைகள்கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது இந்த நிகழ்வையொட்டி 2026 -ம் ஆண்டு விஜயதசமியை முன்னிட்டு கோவை தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வித்யாரம்பத்திற்கு வந்திருந்து அவர்களுக்கு எழுத பயிற்சி கொடுத்தனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் தினமலர் நிர்வாகம் சார்பில் காலை உணவு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர்