காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உத்சவம் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இதில், 11வது நாளான இன்று மஹாநவமி உத்சவம் நடந்தது. காலை 11:00 மணிக்கு பெருமாள், தாயார் கண்ணாடி அறையில் இருந்து ஆளவந்தார் பிரகாரமாக தாயார் சன்னிதியில் எழுந்தருளினர். பிற்பகல் 1:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு பெருமாள், தாயார் புறப்பாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு நுாறு கால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை உத்சவம் நடந்தது. இதில், பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.