காரைக்குடியில் தெய்வீக வாழ்க்கைச் சங்க ஆன்மீக மாநாடு துவக்கம்



பகிர்க copied

காரைக்குடி: காரைக்குடியில் தமிழக மாநில தெய்வீக வாழ்க்கைச் சங்க ஆன்மீக மாநாடு, இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.


காரைக்குடி பர்மா காலனி சிவானந்தா மஹாலில் தமிழக மாநில அனைத்து தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் கிளைகளின் சார்பில், தமிழக மாநில தெய்வீக வாழ்க்கைச் சங்க ஆன்மீக மாநாடு 2026 இன்று தொடங்கியது. அக்.25 வரை நடைபெறும் இம்மாநாட்டில் மூத்த துறவியர் பெருமக்கள், ஆதீன கர்த்தர்கள், குரு மகா சன்னிதானங்கள் மற்றும் சான்றோர்கள் கலந்து கொள்கின்றனர். ரிஷிகேஷ், தெய்வீக வாழ்க்கைச் சங்க துணைத் தலைவர்கள் சுவாமி பத்மநாபனந்தா மஹராஜ், சுவாமி நிர்லிப்தானந்த மஹராஜ் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினர். இன்று நடைபெறும் நிகழ்வில், கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கலந்துகொண்டு மாநாட்டு மலரினை வெளியிடுகிறார். நிகழ்ச்சியில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவிலூர் ஆதீனம் நாராயண ஞான தேசிக சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். செயலாளர் அருணாச்சலம் நன்றி கூறுகிறார். மாநாட்டில் மலர் வெளியீடு நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான கட்டுரை கவிதை போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாக்கள், தேவார இன்னிசை, பரதநாட்டிய நிகழ்ச்சி லிட்டர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்