மஞ்சள் நீராட்டு விழாவுடன் வெள்ளேரியம்மன் உத்சவம் நிறைவு



பகிர்க copied

காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவு பெற்றது.


வாலாஜாபாத் ராஜ வீதியில் உள்ள கோவில் கொலு மண்டபத்தில், கடந்த 10ம் தேதி நவராத்திரி உத்சவம் துவங்கியது. இதையொட்டி, தினமும் வெள்ளேரியம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரநாதர் அலங்காரத்தில் வெள்ளேரியம்மனும், ஜோதி கன்னியம்மனும் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதனுடன் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்