சீத்தாவரம் ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை



பகிர்க copied

உத்திரமேரூர்: சீத்தாவரம் ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.


உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சியில் உள்ள சீத்தாவரம் கிராமத்தில், புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கட்டி வழிபட அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர்.


அதன்படி, இரண்டு ஆண்டுகளாக கோவில் திருப்பணி நடைபெற்று, 12 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. அச்சிலைக்கு பிரதிஷ்டை செய்து நேற்று காலை மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இன்று காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து 7:30 மணிக்கு கும்ப புறப்பாடும், 8:00 மணிக்கு சுவாமி சிலை மீது புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், சீத்தாவரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்