ஹம்பியில் அருள் தரும் விருபாக்ஷேஸ்வரர்



பகிர்க copied

கர்நாடகாவின் ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள விருபாக்ஷா கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.

விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவில், ஹம்பி உள்ளது. இது, ‘யுனெஸ்கோ’ பட்டியலில் இடம் பெற்ற பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். அத்துடன் ஆன்மிக தலமாகவும் திகழ்கிறது. இங்கு பல்வேறு புராதன கோவில்கள் உள்ளன. இவற்றில் விருபாக்ஷா கோவிலும் ஒன்றாகும்.

விஜயநகர பேரரசர் இரண்டாம் தேவராயரின் ஆட்சியில், அவரது தளபதியாக இருந்த லக்கண தன்டேஷா உதவியுடன், விருபாக்ஷா கோவில் கட்டப்பட்டது. தினமும் கோவிலில் பூஜை நடக்கிறது. துங்கா ஆற்றங்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

இங்குள்ள சிவன் விக்ரகம், 9ம் நுாற்றாண்டில் செதுக்கப்பட்டது என, நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் கோவில் மிகவும் சிறிதாக இருந்தது. அதன்பின் விஜயநகர பேரரசர் ஆட்சியில், அற்புதமான கட்டட கலையில் பெரிதாக கட்டப்பட்டது.

கோவிலின் துாண்கள், அதன் மீது செதுக்கப்பட்ட சிற்பங்கள், கலை நயமான மேற்கூரை என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன. கோவிலின் கிழக்கு கோபுரம், மூன்று அடுக்குகள் கொண்டுள்ளது.

வடக்கு கோபுரம் ஐந்து அடுக்குகள் கொண்டதாகும். கோவிலை சுற்றிலும் மண்டபங்கள் உள்ளன. கோவில் முன்பாக மண்டப வடிவில், வர்த்தக மையம் இருந்துள்ளது. அதன் இடிபாடுகளை இன்றைக்கும் காணலாம்.

சம்பிரதாயப்படி பூஜைகள் நடக்கின்றன. சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திங்கட் கிழமைகள், விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். ஹம்பிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், விருபாக்ஷா கோவிலை பார்த்து ரசிக்கின்றனர்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்