* உன்னுடைய கடமைகளை சரியாக செய்.
* பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.
* மனதை சுதந்திரமாக வைத்துக் கொள்.
* நல்ல எண்ணத்துடன் இரு. கடவுளைக் காணலாம்.
* வெறுப்பு எங்கிருந்து கிளம்பியதோ அந்த இடத்திற்கே மீண்டும் திரும்பும்.
* தெய்வீக சக்தி நம் எல்லோரிடமும் உள்ளது.
* எதிலும் தீவிரமான பற்று வைக்காதே.
* அமைதியாக இரு. கடினமான பணியைக் கூட எளிதாக முடிப்பாய்.
* நன்மை, தீமை என்ற வேறுபாட்டை சுயநலமே உருவாக்குகிறது.
* மனம் என்ற கடிவாளத்தை உறுதியாக பிடித்துக் கொள்.
* அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருளே இல்லை.
* கடவுள் சொர்க்கத்தை படைத்தார். ஆனால் மனிதனோ நரகத்தைப் படைத்துக் கொண்டான்.
* பிறர் மீது அன்பாக இருப்பதே உண்மையான ஆன்மிகம்.
* பொறுப்புடன் பணிகளை செய். அதுவே உன்னை உயர்த்தும்.
* பொறுமையே வெற்றிக்கான அடிப்படை தத்துவம்.
* நீ விரும்பியதை செய்வது போல, பிறர் விரும்புவதை செய்ய வழிவிடு.