நாளை விண்னில் பாயும் அதிநவீன நேவிகேஷன் சேட்டிலைட் வெற்றிகரமாக செயல்பட வேண்டி திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு



பகிர்க copied

திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் வெற்றிகரமாக செயல்பட வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சாமி தரிசனம் செய்தார்.


இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் அமைப்பான (நேவிகேஷன்) தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதற்காக என்விஎஸ்-03 செயற்கைக்கோளை நாளை இரவு 11:51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்காக அதன் மாதிரி சாட்டிலைட்களுடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது விஞ்ஞானிகளுடன் ஏழுமலையான் கோயிலில் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார். இதனைத் தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கும் விஞ்ஞானிகளுக்கும் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன் ஜி எஸ் எல் வி 18 ராக்கெட் மூலம் நாளை இரவு 11:51 மணிக்கு நேவிக் 03 என்னும் சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் தனியார் செயற்கைக்கோளான ஸ்கை ரூட்டுடன் சேர்ந்து இந்த ஆண்டு ஐந்தாவது ராக்கெட் ஆகும். 


நேவிகேஷன் தொழில்நுட்பத்திற்காக ஏற்கனவே மூன்று சாட்டிலைட்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வரக்கூடிய நிலையில் தற்போது நான்காவது சாட்டிலைட் விண்ணில்  செலுத்தப்படுகிறது. இந்த நேவிகேஷன் சாட்டிலைட் துல்லியமான தகவல்களுடன் நிகழ்நேர  நிறைய பயன்பாட்டிற்கு  தேவையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்திற்காக 8000 சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆட்களை விண்ணிற்கு அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வரக்கூடிய இந்த திட்டம் என்பதால் மிகவும் கவனிப்புடன் செயல்பட்டு வருகிறோம். எனவே  அடுத்தடுத்து 3 ராக்கெட்  ஆட்கள் இல்லாமல் விண்ணிற்கு அனுப்பி பாதுகாப்பாக  பூமிக்கு கொண்டுவரப்பட்ட பிறகு ஆட்களை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான முதற்கட்ட சோதனை இந்த ஆண்டு இறுதிக்குள் ஆட்கள் இல்லாமல் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்