சங்கடஹர சதுர்த்தி : போடி விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு



பகிர்க copied

போடி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு போடி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு பிடித்தமான கொழுக் கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்தும், அருகம் புல் மாலை அணிவித்து சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். போடி புதூர் சங்கர விநாயகர் கோயில், குலாலர் பாளையம் விநாயகர், அணைப்பிள்ளையார், சந்தைப் பேட்டை விநாயகர், அக்ரஹாரம் விநாயகர், அமராவதி நகர் விநாயகர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் உள்ள விநாயகரு க்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. விநாயகருக்கு பொங்கல் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்