விழுப்புரம்
வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுார்த்தி வழிபாடு நடந்தது.
திருவாடானை
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகர், பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பக விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார், திருத்தேர்வளை ஆண்டு கொண்டேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி மற்றும் கிராமங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது.
போடி
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு போடி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு பிடித்தமான கொழுக் கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்தும், அருகம் புல் மாலை அணிவித்து சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
போடி
புதூர் சங்கர விநாயகர் கோயில், குலாலர் பாளையம் விநாயகர், அணைப்பிள்ளையார், சந்தைப் பேட்டை விநாயகர், அக்ரஹாரம் விநாயகர், அமராவதி நகர் விநாயகர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் உள்ள விநாயகரு க்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. விநாயகருக்கு பொங்கல் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
செம்பட்டி
செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விநாயகருக்கு பால் அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி
அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது.