வியட்நாமில் கண்டெடுக்கப்பட்ட 1,500 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட சிவலிங்கம்!



பகிர்க copied

வியட்நாம்: இந்தியாவுக்கு வெளியேயும் சனாதன தர்மத்தின் தொன்மையான அடையாளங்கள் பரவியிருந்ததை எடுத்துக்காட்டும் வகையில், வியட்நாமில் உள்ள பழமையான கேட் டியன் தொல்லியல் தளத்தில் பிரம்மாண்டமான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 2.26 மீட்டர் உயரம் கொண்ட இந்த லிங்கம், யோனியுடன் இணைந்த வடிவில் அமைந்துள்ளது. கி.பி. 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக இது கருதப்படுகிறது.


வியட்நாமின் கேட் டியென் தொல்லியல் பகுதியில் 1985-ம் ஆண்டு இந்தச் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதியில் நிலவிய பழங்கால இந்து சமய மரபுகள், வழிபாட்டு முறைகள் மற்றும் ஆன்மிகப் பண்பாட்டை எடுத்துரைக்கும் முக்கியச் சான்றாக இது விளங்குகிறது. இந்தியாவின் எல்லைகளைக் கடந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சிவ வழிபாடு பரவியிருந்ததை இத்தகைய தொல்லியல் சின்னங்கள் உணர்த்துகின்றன. காலங்கள் மாறினாலும், நாகரிகங்கள் மறைந்தாலும் மகாதேவரின் வழிபாட்டு மரபும் ஆன்மிகப் பெருமையும் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. இந்து மதமும் அதன் வழிபாட்டு முறைகளும் உலகின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இருந்தன என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. 


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்