சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் அரிசி, 101 ரூபாய் நாணயம்!



பகிர்க copied

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள புகழ்பெற்ற சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் அரிசி மற்றும் 101 ரூபாய் நாணயம் உத்தரவுப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் பக்தர்களின் கனவில் சென்று, சுப்ரமணியசுவாமி கூறும் பொருள் வைத்து பூஜை செய்யப்படுவது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் பெட்டியில் இடம் பெறும். பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்பதும், பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் தற்போது அரிசி மற்றும் 101  ரூபாய் நாணயம் உத்தரவுப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அரிசி விலை உயர்ந்து வரும் சூழலில் இந்த மாற்றத்தால் என்ன பலன் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் உள்ளது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்