சிம்மஸ்த கும்பமேளா துவக்கம்: திரிவேணி சங்கமத்தில் கொடியேற்றி புனித நீராடிய சிருங்கேரி ஜகத்குரு!



பகிர்க copied

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா கோலாகலமாக  நடைபெற்றது. இதில், சிருங்கேரி சாரதா பீடம்  ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம், ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசன்னிதானத்தின்  ஆசியுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க கொடியேற்றத்தையும் முதல் புண்ணிய நீராடலையும் நடத்தினார்.


ஜகத்குருவிடம் ஆசி பெற்ற முதல்வர்!


விழாவுக்கு முன்னதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சிருங்கேரி ஜகத்குருவைத் தரிசித்து ஆசி பெற்றார். பின்னர் கணபதி பூஜையைத் தொடங்குவதற்கு முன்பு ஜகத்குரு அவருக்கு ருத்ராட்ச மாலையைப் பிரசாதமாக வழங்கி ஆசி வழங்கினார். தொடர்ந்து, மகாராஷ்டிரத்தின் புனித பூமி மற்றும் அனைத்து மக்கள் சார்பாகக் கொடியேற்றத்துக்கான சங்கல்பத்தை முதல்வர் மேற்கொண்டார்.


கோதாவரி நதியின் புனிதத் தலத்தில் கொடியேற்றம்!


திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் உள்ள குசாவர்த்த தீர்த்தம், புனித கோதாவரி நதி தோன்றும் இடமாகப் போற்றப்படுகிறது. இங்கு கொடியேற்றத்துக்கு முன்னதாக ஜகத்குரு, கொடிமரம் மற்றும் கொடிக்கு  பூஜைகளைச் செய்தார். மகாராஷ்டிர முதல்வரும் கொடிமரம் மற்றும் கொடிக்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார். சுபமுகூர்த்தத்தில் குசாவர்த்த தீர்த்தத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா நடைபெற்றது.


சாரதாம்பாள் திருவுருவம் வழங்கிய ஜகத்குரு!


விழாவுக்குப் பிறகு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸும் ஜகத்குருவுக்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றனர். அப்போது அவர்களுக்கு சாரதாம்பாளின் அழகிய திருவுருவச் சிலையும், வித்யாசங்கரர் கோவிலின் மாதிரிச் சிலையும் ஜகத்குருவால் வழங்கப்பட்டன. இந்த  விழாவில் ஆயிரக்கணக்கான சாதுக்கள், ஆச்சாரியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்