நத்தம்: சஷ்டியை முன்னிட்டு திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் தண்டபாணி சன்னதி, வேம்பார்ப்பட்டி பாலமுருகன் கோயில், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.