மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் மகா சண்டி ஹோமம்



பகிர்க copied

புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், மகா சண்டி ஹோமம், 108 சுவாசினி பூஜை இன்று நடந்தது.


இதையொட்டி, நேற்று  காலை மகா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா லட்சுமி ஹோமமும், மாலை கலச ஸ்தாபனம் சப்தசதீ பாராயணம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை கோ பூஜை, அஸ்வ பூஜை, விருஷப பூஜை, 108 சுமங்கலி பூஜை, கன்யா ப்ரம்மசாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் சண்டீ ஹோமம், மகா பூர்ணாஹூதி வசோர் தாரை கலச புறப்பாடு, அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கீதாராம் குருக்கள், சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள் செய்திருந்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்