உத்தமபாளையம்: ‘ராம நாமம் பாடினால், தினமும் சொல்லிக் கொண்டிருந்தால் நமக்கு வரும் துன்பங்கள் நீங்கும்,’என உத்தமபாளையம் சீதாராம் பஜனை மடத்தில் நடந்த கூட்டு பிரார்த்தனையில், பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மைய பொறுப்பாளர் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யதாஸ் பாகவதர் பேசினார்.
சீதாராம் பஜனை மடத்தில் நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்ற அவர் பேசியதாவது :
இறை நாமத்தை பாடுவதால் நமது கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கும். நன்மைகள் பெருகும்.
ஆஞ்சநேயர் ராம நாமத்தை கூறி கடலை தாண்டினார், மலையை தூக்கினார்.
நாமும் ராம நாமத்தை ஜெபம் செய்தால், நமக்கு மலை போல் வரும் துன்பங்களும் பனி போல் நீங்கி விடும். திரவு பதி துன்பப்பட்ட போது கிருஷ்ணா என்று அழைத்தார். பகவான் கிருஷ்ணரும் ஓடோடி வந்து வஸ்திரம் கொடுத்து திரவுபதியின் மானத்தை காப்பாற்றினார். ராம நாமம் ஆயிரம் யானை பலம் வாய்ந்தது.
வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள், சோதனைகள் நம்மை சூழ்ந்தாலும், நம்மை பாதுகாக்கும் அரணாக ராம நாமம் திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என்றார். பிரசாதம் வழங்கப்பட்டது. ராம பக்தர் முத்துராமன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.