நாகப்பட்டினத்தில் 12ம் நுாற்றாண்டு சோழர் கால சிலைகள் கண்டெடுப்பு



பகிர்க copied

சென்னை: நாகப்பட்டினத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால நடராஜர், சிவகாமி அம்மன் வெண்கல சிலைகள் பீடங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வுப் பணிகள் நாகப்பட்டினத்தில் நடந்து வருகின்றன. இதுவரை ஆறு அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.


இதில், ‘ஏ2’ மற்றும் ‘எக்ஸ்.ஏ.,1’ ஆகிய குழிகளில், ஒரு மீட்டர் ஆழத்தில் இரண்டு வெண்கல சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை, 110 செ.மீ., உயரமும், 100 செ.மீ., அகலமும் கொண்டது. ஆனந்த தாண்டவக் கோலத்தில் அமைந்துள்ள இச்சிலைக்கு, நான்கு கரங்கள் உள்ளன.


மற்றொரு சிலையான சிவகாமி அம்மன் சிலை 82 செ.மீ., உயரமும், 23 செ.மீ., அகலமும் கொண்டது. திரிபங்க நிலையில் அமைந்துள்ள இச்சிலை, இரு கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு சிலைகளின் உடல் அமைப்பு, அசைவுகளின் நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில், அவை கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிற்பக்கலைப் படைப்புகள் என, தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். தொல்லியல் துறையின் அகழாய்வின்போது வெண்கல சிலைகள் கண்டெடுக்கப்பட்டது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பட்டர், ஆதீன கோயில்களின் கண்காணிப்பாளர் மணி, உள்துறை விருதகிரி, வெற்றிவேல், கார்த்திகேயன், சீர்காழி கோவில் செந்தில் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு தரிசித்து திருவருளையும், குருவருளையும் பெற்றனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்