குஜராத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜய யாத்திரை: வடநகரில் 10 நாட்கள் உலக அமைதி மகா யாகம்!



பகிர்க copied

குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள், குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 20, வரை விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின்போது சூரத், வதோதரா, அகமதாபாத், அம்பாஜி, வடநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.


சனாதன தர்மம், வேத மரபு மற்றும் இந்தியப் பண்பாட்டு விழுமியங்களைப் பரப்புவதோடு, காஞ்சி காமகோடி பீடத்துக்கும் பக்தர்களுக்கும் இடையிலான ஆன்மிகத் தொடர்பை வலுப்படுத்துவதே இந்த யாத்திரையின் முக்கிய நோக்கமாகும். 


10 நாட்கள் உலக அமைதி மகா யாகம்: இந்த விஜய யாத்திரையின் முக்கிய நிகழ்வாக வடநகரில் உள்ள ஹாட்கேஷ்வர் மகாதேவர் கோவிலில் உலக அமைதி மகா யாகம் நடைபெறவுள்ளது. நவம்பர் 11 முதல் 20-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த மகா யாகத்தில், உலக அமைதி, நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கம், சமூக நலன் மற்றும் அனைத்து உயிர்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்காக வேத முறைப்படி சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெற உள்ளன. இந்த ஆன்மிக நிகழ்வில் பக்தர்கள், ஆன்மிகச் சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லோகா சமஸ்தா சுகினோ பவந்து  அதாவது உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழட்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த மகா யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சங்கராச்சாரியார் சுவாமிகளின் இந்த குஜராத் விஜய யாத்திரை, 1980-ம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சி மடத்தின் ஆன்மிகப் பயணத்தையும் நினைவுகூரச் செய்கிறது. அப்போது காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது பீடாதிபதியான ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் குஜராத்துக்கு விஜயம் செய்தார். அப்போது இளைய பீடாதிபதியாக இருந்த தற்போதைய பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் அவருடன் வந்திருந்தார். ஆதிசங்கரர் அருளிய அத்வைத வேதாந்த மரபையும் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பாதுகாத்து வரும் காஞ்சி காமகோடி பீடம், வேதக் கல்வி, ஆலய வழிபாட்டு மரபுகள் மற்றும் ஆன்மிகக் கல்வி வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறது. இந்தப் பின்னணியில் நடைபெறும் தற்போதைய விஜய யாத்திரையும், வடநகரில் நடைபெறவுள்ள 10 நாள் உலக அமைதி மகா யாகமும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்