திருக்கழுக்குன்றம்: ஆண்டிகுப்பத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து அகற்ற வேண்டும் என, அலுவலர்களுக்கு, தாசில்தார் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆண்டிகுப்பத்தில் உள்ள குளம் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, கோவில் ஒன்றை கட்டி வருகின்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினரிடம் முறையிட்டனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் விஜயலட்சுமி ஆக்கிரமிப்ப இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவிலை ஆய்வு செய்தார். அப்போது அரசு புறம்போக்கு இடத்தில் கோவில் கட்டப்பட்டியிருப்பது உறுதியானது. அதை தொடர்ந்து, அந்த கோவிலை வரும் 10ம் தேதிக்குள் இடித்து அகற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.